பெண் போட்டோகிராபரை கற்பழித்துவிட்டு படம் பார்த்து, தூங்கிய குற்றவாளிகள்
மும்பை: மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண்ணை கற்பழித்தவர்கள் இந்த சம்பவத்திற்கு பிறகு படம் பார்த்துவிட்டு, நிம்மதியாக தூங்கியுள்ளனர்.
மும்பையில் உள்ள செயல்படாத மில்லில் வைத்து பத்திரிக்கைப் புகைப்படக்கார பெண் 5 பேரால் கற்பழிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சந்த் பாபு சத்தார் ஷேக், சிராஜ் ரஹ்மான்(20), விஜய் மோகன் ஜாதவ்(18), சலீ்ம் மற்றும் காசிம் பங்காலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஜாதவ் பாம்பே மெட்ரோ கார்பரேஷன் ஊழியரின் மகன். அவர் தோபி தலாவ் பகுதியில் வசித்து வந்தார். அவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
சம்பவத்தன்று ஜாதவ் போதைப் பொருள் அடிமையான சலீமை சந்தித்து அவருடன் தம்மடிக்க சக்தி மில்லுக்கு சென்றுள்ளார். அவர் மில்லுக்கு செல்லும் வழயில் பத்திரிக்கை பெண்ணும், அவரது நண்பரும் மில்லுக்கு செல்லும் வழியை அவர்களிடம் கேட்டுள்ளனர். சலீம் அவர்களுக்கு வழியைக் காட்டிவிட்டு காசிமுக்கு போன் போட்டு சிராஜ் மற்றும் அஷ்ரபுடன் மில்லுக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் ஒன்று கூடியவுடன் அவர்கள் அப்பெண்ணை சந்தித்து மில் பகுதியில் நடந்த கொலைகள் குறித்து தெரிவித்துள்ளனர். பின்னர் ஒருவர் அங்கு கிடந்த பாட்டிலை உடைத்து அதன் கூர் பகுதியை அப்பெண்ணின் கழுத்தில் வைத்துள்ளார். அப்பெண்ணை ஒரு சுவருக்கு பின்னால் அழைத்துச் சென்று அவரது கையை கயிற்றால் கட்டியுள்ளனர். அவருடன் வந்த ஆண் பத்திரிக்கையாளரை தாக்கிவிட்டு அவர்கள் அப்பெண்ணை கற்பழித்துள்ளனர்.
அதன் பிறகு அந்த 5 பேரும் எதுவும் நடக்காதது போன்று ஜாதவின் வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டனர். மறுநாள் காலையில் எழுந்தபோது போலீசார் தேடுவதை அறிந்து பிரிந்து சென்றுள்ளனர். ஆனால் சிராஜும், ஜாதவும் அன்று முழுவதும் ஒன்றாகவே இருந்துள்ளனர்.
மாலையில் அக்ரிபதாவில் புகைபிடித்துள்ளனர். அதன் பிறகு ஜாதவ் வீடியோ பார்லர் சென்று மாலை முழுவதும் படம் பார்த்துவிட்டு அங்கேயே தூங்கிவிட்டார். ஜாதவ் பார்லரில் இருப்பது தெரிந்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications