கண்ட இடத்தில் தொட்டார், ஓரல் செக்ஸுக்கு அழைத்தார்: அசாரம் பாபு மீது சிறுமி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Asaram Bapu asked me for oral sex, says victim
டெல்லி: மத குருவான அசாரம் பாபு தன்னிடம் ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு கூறியதாக 16 வயது சிறுமி தெரிவித்துள்ளார்.

மத குருவான அசாரம் பாவுக்கு(72) சொந்தமான மத்திய பிரதேசத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படித்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ம் தேதி இரவு 10 மணிக்கு அந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் ஜோத்பூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அசாரம் பாபு ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை தீய சக்திகள் தீண்டியதாக நினைத்த அவர்கள் தங்கள் மகளை குணப்படுத்துமாறு கேட்டுள்ளனர். சிறுமியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் டெல்லி போலீசார் அசாரம் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சிறுமி விசாரணையில் கூறுகையில்,

தனி அறைக்குள் அழைத்துச் சென்ற பாபு என் சட்டையை கழற்றிவிட்டு என்னை கண்ட இடத்தில் தொட்டார். அப்போது சத்தம் போட்டால் அவ்வளவு தான் என்று மிரட்டினார். மேலும் ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு கூறினார் என்றார்.

இதற்கிடையே அசாரம் பாபு மீதான வழக்கு விசாரணை விவரங்களை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்கம் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 30ம் தேதிக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இன்று மதியம் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அசாரம் பாபு கூறுகையில், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. இது ஒரு சதி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+