மியான்மர் .. மோரேவில் மணிப்பூர் ஆளுநர்- தமிழ் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை!
இம்பால்: மணிப்பூர் எல்லையில் தமிழர் கோயில் உள்ளிட்ட இந்திய கிராமங்களை மியான்மர் ஆக்கிரமிக்க முயற்சித்து வரும் நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அஸ்வனி குமார் என்று எல்லைப் பகுதியான மோரே நகருக்கு சென்று தமிழ்ச் சங்கப் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூர் எல்லையான மோரே நகரத்தைச் சுற்றிய இந்திய கிராமங்களில் முகாம்களை அமைக்க, எல்லை வேலிகளை அமைக்க மியான்மர் ராணுவம் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. இதற்கு அங்கு முகாமிட்டிருக்கும் அசாம் ரைபிள்ஸ் படையினரும் இந்திய அரசு அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோரேயில் மணிப்பூர் ஆளுநர்
மோரே நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்துவருகின்றனர். இங்குள்ள பிரம்மாண்ட தமிழர் கோயில்தான் வடகிழக்கு மாநிலங்களிலேயே 2வது மிகப் பெரிய கோயிலும் ஆகும். இந்த கோயில் நிலமும் கூட ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆவணத்தின்படி தங்களுக்கு உரியது என்கிறது மியான்மர் ராணுவம்.
இந்த நிலையில் பதற்றம் நீடித்து வரும் மோரே நகரம் மற்றும் சுற்றியுள்ள எல்லை கிராமங்களைப் பார்வையிடுவதற்காக மணிப்பூர் மாநில ஆளுநர் அஸ்வனிகுமார் இன்று தரைவழியாக சென்றடைந்தார்.

மோரே நகரில் ஆலோசனை
மோரே நகரில் தமிழ் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள், குக்கி இன பிரதிநிதிகள், அனைத்து இன அபிவிருத்தி குழுவினர் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அஸ்வனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

தமிழ் சங்கத்தினர் விவரிப்ப
மோரே தமிழ்ச் சங்கத்தின் சார்பில் செயலாளர் கே.பி.எஸ். மணியம், இணை செயலர் கே. சுப்பிரமணியன், நிதிச் செயலர் காஜா மொய்தீன் ஆகியோர் ஆளுநர் அஸ்வனிகுமாருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஏற்கெனவே தமிழர் கோயில் நிலத்தை மியான்மர் ராணுவம் எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும் அவர்கள் விவரித்தனர்.

ஒருங்கிணைந்த செக்போஸ்ட
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு சர்ச்சைக்குரிய வேலிகள் அகற்றும் பணியையும் இந்தியா-மியான்மர் இணைந்து உருவாக்கும் ஒருங்கிணைந்த செக்போஸ்ட் பகுதியையும் அவர் பார்வையிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications