அடி மேல் அடி.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெ.வாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி: தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் வெகுவாக குறைந்துள்ள நிலையில், மின்வெட்டு மீண்டும் திரும்பியுள்ள நிலையில், தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையத்தின் முதல் மின்உற்பத்தி அலகுகின் பழுதால் 210மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின்நிலையல் 210 மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட 5அலகுகள் மூலமாக நாள்தோறும் 1050மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் சமீபகாலமாக தொடரும் இயந்திர பழுது, பாய்லர் பழுதுகளால் அவ்வப்போது மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24ம் தேதி அதிகாலை அனல்மின்நிலையத்தின் 3ம் மின்உற்பத்தி யூனிட்டில் பாய்லர் பழுது காரணமாகவும், 5வது மின்உற்பத்தி யூனிட்டில் இயந்திர பழுது காரணமாகவும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டு மின்உற்பத்தி அலகுகளின் பழுதால் 420மெகாவாட் மின் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டது. மின்உற்பத்தி அலகுகளில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்பட்டு இயக்கி வருகின்றன.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தின் முதலாவது யூனிட்டில் பாய்லர் பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பாய்லர் பழுதினை சரிசெய்யும் பணிகள் இன்று அல்லது நாளைக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் மீண்டும் மின்தடை அதிகரித்துள்ள சூழலில் அனல்மின் நிலையத்தின் பாய்லர் பழுதால் மின்தடை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications