கரூர் சாயப்பட்டறை பூங்கா விவகாரம்: பின் வாங்கிய தமிழக அரசு
கரூர்: கரூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கும் விவகாரத்தில் பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் புன்னம், பவுத்திரம் கிராம பஞ்சாயத்து இணைப்பு பகுதியில் சாயப்பட்டறை பூங்கா அமைக்க சுமார் 150 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்பட்டால் புன்னம், பவுத்திரம், விஸ்வநாதபுரி, குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலம் பாதிக்கப்படும் என பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த புன்னம் பஞ்சாயத்து கூட்டத்திலும் சாயப்பட்டறை பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கடந்த ஜூலை 22ம் தேதி நடந்த பொது மக்கள் கலந்தாய்வு கூட்டத்திலும், கடந்த 15ம் தேதி நடந்த கிராமசபை கூட்டத்திலும் சாயப்பட்டறை பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புன்னம் கிராமத்தில் ரகசியமாக சாயப்பட்டறை பூங்கா அமைக்கப் பணிகள் நடந்து வருவதாக தகவல் அறிந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து தங்களது எதிர்ப்புகளை புகார் மனுக்களாக்கி முதல்வர் அலுவலகம், மற்றும் தனிப் பிரிவு என பல நிலைகளிலும் விரிவுபடுத்தினர். இந்த நிலையில் அந்த பகுதியில் சாயப்பட்டறை பூங்கா அமையாது என கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி அறிவித்துள்ளார்.
அதே போன்று, இந்த இபகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான செந்தில் பாலாஜியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் பொது மக்கள் வாக்கு வங்கிக்கு வேட்டை வைத்துக் கொள்ளக் கூடாது என்பாதல் தான் இந்த முடிவாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications