For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிரியா மீது ராணுவ நடவடிக்கையா? யு.எஸ்க்கு ஈரான் எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ரசாயன குண்டு வீச்சு விவகாரத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சிரியாவில் அதிபர் ஆசாத்தை எதிர்த்துப் போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த 21-ந் தேதி ரசாயன குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்டது. இதில் 1300 பேர் பலியாகினர் என்றும் தகவல்கள் வெளியாகின.

Iran warns west against military intervention in Syria

ஆனால் சிரியாவோ இதை மறுத்திருந்தது. மேலும் ரசாயன குண்டுகள் வீசப்பட்ட இடத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் ஆய்வும் செய்தனர்.

இதனிடையே ரசாயன குண்டுகள் வீசிய சிரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்து கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஏற்கெனவே சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Iran has warned that US military intervention in Syria will result in a conflict that would engulf the region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X