நொய்டாவில் பூட்டிய அறையில் இளம்பெண் மரணம்: தலைமறைவான காதலருக்கு போலீஸ் வலைவீச்சு
நொய்டா: நொய்டாவில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண் ஒருவரின் சடலம் போலீசாரால் கைப்பற்றப் பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றிற்கு கடந்த செவ்வாயன்று மாலை 6.35 மணிக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளனர் ஒரு ஆணும், பெண்ணும். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் படி அன்றிரவே, அந்த ஆண் அறையை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று காலை அறையைச் சுத்தம் செய்வதற்காக அறைக்கதவைத் தட்டியுள்ளார் ஊழியர் ஒருவர். ஆனால், வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், முதலில் உள்ளே அசந்து தூக்குகிறார்கள் என ஊழியர் எண்ணியுள்ளார்.
பின் தொடர்ந்து கதவு திறக்கப்படாமலேயே இருந்ததால் சந்தேகமடைந்த ஊழியர் அறையின் டூப்ளிகேட் சாவியக் கொண்டு வந்து அறையைத் திராந்து பார்த்த போது அதிர்ந்து விட்டார். கட்டிலில் காயங்களுடம் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்த இளம்பெண் பெயர் லுப்னா என்பதும், அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், அவருடன் அறையில் இருந்த ஆணின் பெயர் சபாஷ் தேஷ்முக் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தலைமறைவாக உள்ள தேஷ்முக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லுப்னாவின் சகோதரனிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், லுப்னாவும், தேஷ்முக்கும் காதலர்கள் என்பதும், அவர்கள் ஏற்கனவே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இருந்த போதும், பிரேதபரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே இது கொலையா, தற்கொலையா என்பது உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications