நிலம் கையகப்படுத்தும் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்
டெல்லி: உணவு பாதுகாப்பு மசோதாவைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று கடும் அமளிகளுக்கு இடையே மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
உணவு பாதுகாப்பு மசோதா எப்படி கனவுத் திட்டமாக வாக்கு சேகரிப்புக்கான அஸ்திரமாக இருக்கிறதோ அதேபோல் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவும் தங்களுக்கு தேர்தலில் கை கொடுக்கும் என்று கருதுகிறது மத்திய அரசு.
இதனாலேயே எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி திருத்தங்களைக் கோரி ஓரளவு சமாதானப்படுத்தி வைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த மசோதா இன்று லோக்சபாவில் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
நிலம் கையகப்படுத்துதல் மசோதா
உள்கட்டமைப்புத் திட்டங்கள், தொழில் திட்டங்களில் பல நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கலால் நின்று போய்விடுகின்றன. இதை தவிர்க்க 117 ஆண்டுகளுக்கு முந்தைய நில கையகப்படுத்தும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறது மத்திய அரசு. இந்த மசோதாவுக்கு நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்-2012' என்ள பெயரிடப்படுள்ளது. நிலம் கையகப்படுத்தல் சட்டம்-1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?
இந்த மசோதா நிறைவேறினால் தனியார் நிலத்தை, அரசு கையகப்படுத்தும்போது, ஊரகப் பகுதியில் நிலத்தின் மதிப்பில் 4 மடங்கும், நகர்ப்பகுதியில் 2 மடங்கும் இழப்பீடு கிடைக்கும்.
66% பேர் ஒப்புதல் இருந்தால்தான் நிலத்தை எடுக்க முடியும்
நிலம் தருவோரில் 66% பேரின் ஒப்புதல் இருந்தால்தான் அவற்றை கையகப்படுத்த முடியும்.
விளைநிலைத்துக்கு தடை
இம்மசோதா நிறைவேறினால் நீர்ப்பாசனம் மிக்க பயிர் சாகுபடி செய்யும் நிலம் மற்றும் விவசாய நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்காது
ஆனால்..
பொதுத் திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் போது அருகில் உள்ள விவசாய நிலம் எனில் அதையும் கையகப்படுத்த வகை செய்கிறது இந்த சட்டம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications