மாயமான சிறுவனின் சடலம் கூவத்தில் மிதந்தது: கொலையா? விபத்தா? போலீஸ் விசாரணை
சென்னை: மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப் பட்ட சிறுவனின் உடல் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப் பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு மங்கீஸ்கார்டன், திடீர்நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜ். இவரது மனைவி ராஜனி. இவர்களது 2 வயது குழந்தை ஜீவா, நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனான். இதனால், சந்தேகமடைந்த அவனது பெற்றோர் சிறுவனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என ஆயிரம் விளக்கு போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் விசாரணையில் இறங்கினார் இன்ஸ்பெக்டர் கந்தவேலு. மாயமான குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளியைக் கண்டு பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் கூவம் ஆற்றில் சிறுவன் ஒருவனது சடலம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அணுப்பி வைத்த பொலீசார், அது காணாமல் போன சிறுவன் ஜீவா தான் என்பதை உறுதி செய்தனர்.
துறுதுறு குழந்தையான ஜீவா அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று விளையாடுவது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து, சிறுவன் விளையாடும் போது தவறி கூவத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், சிறுவனின் மர்ம மரணம் குறித்து, கொலையா, விபத்தா என்ற இரு வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications