வைகுண்டராஜன் நிறுவனங்களில் வருவாய்த்துறை ரெய்டு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: வைகுண்டராஜனுக்குச் சொந்தமான விவி மினரல்ஸ் நிறுவனங்களில் தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் தாது மணல் குவாரிகளில் பெருமளவில் விவி மினரல்ஸ் நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் விசாரணையும், சோதனைகளும் நடந்தன.
மேலும் ஐஏஎஸ் அதிகாரி ககந்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்பு ஆய்வுக் குழுவும் அமைக்கப்பட்டு 2 கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனங்களில் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். சேந்தமங்கலம், பெரியசாமிபுரத்தில் உள்ள அலுவலகங்களில் ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் ஏதாவது சிக்கியதா என்பது குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications