நேபாள எல்லையில் சிக்கிய யாசின் பட்கல் சென்னை போலீசிடம் இருந்து தப்பியவன்!!
டெல்லி: இந்திய- நேபாள எல்லையில் சிக்கிய இந்திய முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பதுங்கியிருந்து போலீசிடம் சிக்காமல் தப்பியவன் என தெரியவந்துள்ளது.
இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி. 2010ஆம் ஆண்டு புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு, 2011ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு என பல சம்பவங்களில் யாசின் பட்கல் தேடப்பட்டு வந்தான்.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியான சேலையூரில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் யாசின் பட்கல் பதுங்கியிருந்தான். இதைத் தொடர்ந்து மத்திய உளவுத் துறை, டெல்லி போலீஸ், சென்னை போலீஸ் என ஒருங்கிணைந்து சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால் யாசின் பட்கல் போலீசாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிவிட்டான். இது சென்னை போலீசாருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
தற்போது சிக்கியிருக்கும் யாசின் பட்கலிடம் கர்நாடகா, குஜராத் மாநில அரசுகள் விசாரணையை நடத்த முடிவு செய்திருப்பது போல் சென்னை போலீசாரும் அவனை விசாரிக்கக் கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
Indian Mujahideen co-founder Yasin Bhatkal, arrested on Thursday from the Indo-Nepal border in north Bihar after being on the run for more than five years, gave police the slip in Chennai less than two years ago.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications