யாருடன் கூட்டணி? எந்தக் கட்சியும் தீண்டத்தகாதது அல்ல: எதியூரப்பா
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் எந்த ஒரு கட்சியும் தீண்டத்தகாத கட்சி அல்ல என்றும் கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, எனக்கு தேசிய கட்சியோ அல்லது மாநில கட்சியோ எதுவும் தீண்டத்தகாத கட்சி அல்ல. அதேபோல் எங்களது கட்சியும் தீண்டத்தகாதது அல்ல.

அடுத்து நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் உள்பட எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றாலும் அதுகுறித்து கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்.
கர்நாடக ஜனதா கட்சியை வேறு எந்த கட்சியுடனும் இணைக்கும் எண்ணம் இல்லை. அதேபோல், நானும் வேறு கட்சியில் போய் சேர மாட்டேன். லோக்சபா தேர்தலில் கர்நாடக ஜனதா கட்சி 8 முதல் 10 இடங்களில் போட்டியிடும் என்றார்.
முன்னதாக, கர்நாடக ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் 19 பேரை எதியூரப்பா அறிவித்தார். மாநில செயல் தலைவராக முன்னாள் அமைச்சர் ஷோபா, மூத்த துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் சி.எம்.உதாசி உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாநில செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஷோபாவுக்கு மைசூர் தலைப்பாகை மற்றும் மாலை அணிவித்து எதியூரப்பா வாழ்த்தினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications