நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய கிராமங்களை மியான்மர் கபளீகரம் செய்யும்: ராஜ்யசபாவில் டி.ராஜா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மணிப்பூர் எல்லையில் முகாம்களை அமைக்கும் நடவடிக்கையை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இந்திய கிராமங்களை மியான்மர் கபளீகரம் செய்துவிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி. ராஜா எச்சரித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இது தொடர்பாக பேசிய டி.ராஜா, மியான்மர் ஊடுருவலால் ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமும் பதற்றத்தில் இருக்கிறது. அங்கு இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் தூரம் ஊடுருவி மியான்மர் ராணுவம் முகாம் அமைத்து இருக்கிறது.
எல்லை வேலி அமைப்பது என்பது போதைப் பொருள் கடத்துதல், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்குத்தான். ஆனால் மியான்மரோ இந்திய எல்லைக்குள்ளேயே முகாம்களையே அமைத்து வருகிறது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய கிராமங்களை மியான்மர் கபளீகரம் செய்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications