ராஜபக்சே, ரணில், இரா. சம்பந்தனுடன் நவநீதம் பிள்ளை ஆலோசனை!
கொழும்பு: இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
மகிந்த ராஜபக்சேவின் அலரி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில் வாழும் மக்களிடையே சமத்துவம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்று வலியுறுத்தினார் நவநீதம்பிள்ளை.

மேலும் சிறுபான்மையினத்தவர்களின் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு உரியநடவடிக்கை தேவை என்றும் ராஜபக்சேவிடம் அவர் வலியுறுத்தினார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவையும் நவநீதம் பிள்ளை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து கொழும்பில் சினமன் லேக்சைட் ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை நவநீதம்பிள்ளை சந்தித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமது இலங்கை பயணம் தொடர்பாக அடுத்தமாதம் ஐ.நா.மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில் அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார் நவநீதம் பிள்ளை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications