தூத்துக்குடி: 10 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள் கைது!
தூத்துக்குடி: 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்களை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி, தாளமுத்து நகரை சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் ஆனந்தி மற்றும் அனுஷ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இரு மாணவிகள் திடீரென கைகளில் பணத்துடன் வந்துள்ளனர்.

சந்தேகப்பட்டு விசாரித்த போது, பக்கத்து தெருவில் சிமென்ட் கடையில் வேலை பார்க்கும் தாத்தா காசு கொடுத்ததாகவும், பின்னர் தன் தோழியையும் அழைத்து வந்தால் அதிக காசு தருவதாகவும் கூறினார். அதனால் போனோம், காசு கொடுத்தார் என்று கூறி இருக்கிறாள் சிறுமி.
மேலும் சிறுமிகளை விசாரித்தபோதுதான் அறுபது வயதைக் கடந்த 3 முதியவர்கள் 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்திருக்கிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சமீர் நகரை சேர்ந்த சிமெண்ட் கடை ஊழியரான பால்ராஜ், வாட்ச்மேன் மூக்கையா, காமராஜ் நகரை சேர்ந்த மீனவர் சர்க்கரை ஆகிய 3 பேரை சமீர் நகர் போலீசார் விசாரித்துள்ளனர். அதில், தினமும் மாலையில் பள்ளி முடிந்து வரும் சிறுமிகளுக்கு மிட்டாய், திண் பண்டங்கள் கொடுத்து வீட்டிற்கு அழைத்து சென்று செல்போன் மற்றும் டி.வி.யில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை மூன்று முதியவர்களும் ஒப்புக் கொண்டனர்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் 3 முதியவர்களையும் கைது செய்து, முதலாவது ஜுடிஷியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுத்தி, தூத்துக்குடி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இந்த 3 கொடூரர்களில் ஒருவரான மூக்கையா, 15 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications