ஒரு வெளம்பரத்துக்காக.. தன் வீட்டு மீது குண்டு வீச செய்த திண்டுக்கல் பாஜக பிரமுகர் கைது!
திண்டுக்கல்: தமக்கு விளம்பரம் கிடைக்குமே என்பதற்காக தம் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச ஏற்பாடு செய்த திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பிரவீண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடைந்தையாக பெட்ரோல் குண்டு வீசியதாக அவரது நண்பர் கமலக்கண்ணன் என்பவரும் சிக்கியுள்ளார்.
கோயம்புத்தூரில் அனுமன் சேனா என்ற அமைப்பின் தலைவர் தம்மை யாரோ கடத்திவிட்டதாக போலீசில் புகார் கூறியிருந்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு போலீசில் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
இந்த நிலையில் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் 3வது தெருவில் வசித்து வரும் பாஜகவைச் சேர்ந்த பிரவீண்குமாரின் மனைவி தங்களது வீடு மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுவீசிவிட்டதாக கணவருக்குத் தகவல் கொடுத்தார். தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் அவர் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து பிரவீண்குமாரும் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தாம் பிரபலமடைவதற்காக தமது வீடு மீது வெடிகுண்டு வீச பிரவீண்குமாரே ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
இதனால் பிரவீண்குமார், வெடிகுண்டு வீசிய அவரது நண்பர் கமலகண்ணன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications