ஆண்மையுடன்தான் இருக்கிறார் அஸராம் பாபு: டாக்டர்கள் சர்ட்டிபிகேட்
ஜோத்பூர்: பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்ட சாமியார் அஸராம் பாபு முழு ஆண்மைத் தன்மையுடன் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (75) உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின்பேரில், சாமியார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.

பலாத்கார புகார் கூறிய பெண்ணுக்கு துஷ்ட ஆவிகளின் பாதிப்பு இருப்பதால், அவரை ஜோத்பூரில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மணாலியில் உள்ள ஹரி ஓம் ஆசிரமத்துக்கு அழைத்து வரும்படி பெண்ணின் தந்தையிடம் அஸராம் பாபு கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மணாலி ஆசிரமத்தில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று தனியறையில் வைத்து அஸராம் பாபு பலாத்காரம் செய்துவிட்டார் என்று அந்த பெண் புகார் அளித்திருந்தார்.
சம்பவத்தன்று, ஆசாராம் பாபு தன்னிடம் எப்படியெல்லாம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பதை பாதிக்கப்பட்ட மாணவி விளக்கி கூறினார். அருகிலிருந்த அஸராம் பாபு அந்த பெண் கூறியதை எல்லாம் திடமாக மறுத்தார்.
இதனையடுத்து, ஆசாராம் பாபுவை ஆண்மை சோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அவர் முழு ஆண்மைத் தன்மையுடன் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே, பலாத்கார புகார் கூறிய பெண்ணிடம் அவர் தவறான முறையில் நடந்து கொண்டிருக்கலாம் என்பதை போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஆசாராம் பாபுவின் விசாரணை காவல் இன்று மாலையுடன் முடிகிறது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து, விசாரணை காவலை நீட்டிக்கும்படி போலீசார் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications