அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கிய ஆன்மீகத் தொண்டர்கள்
சென்னை: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை சுத்தப்படுத்தும் பணியில் 5000 ஆன்மீகத் தொண்டர்கள் களம் இறங்கி பணியாற்றினர்.
செனனையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இந்த சேவை நடந்தது.
சுவாமி விவேகானந்தரின்150வது பிறந்த நாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னையில்
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவ மனைகளில் தூய்மை பணி நடந்தன.

சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேயர் சைதை துரைசாமி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

பங்காரு அடிகளார் மகன் அன்பழகன்
ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவரும் பங்காரு அடிகளாரின் மகனுமான அன்பழகன் தலைமையில் 5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

வார்டுகள் சுத்தம்
அரசு பொது மருத்துவமனையில் 2000 பேர் காலை முதல் மாலை வரை இந்த பணியை செய்தனர். குழாய் விளக்கு அதாவது டியூப் லைட்கள், மின் விசிறிகள், ஜன்னல் கம்பிகள், வார்டுகளுக்கு உட்புறமும், வெளிப்புறமும், வளாகத்தையும் தூய்மைப்படுத்தினார்கள்.

குப்பைகள் அகற்றம்
ஆண்-பெண் தொண்டர்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனை முழுவதும் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றினார்கள்.

திருப்பூரில் குளம் தூர்வாறும் பணி
இதற்கிடையே, திருப்பூர் மங்கலம் சாலையில் அமைந்துள்ள ஆண்டிபாளையம் குளம் தூர் பணி காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இப்பணியில் திருப்பூர் பகுதியில் உள்ள பல்வேறு தொண்டு அமைப்புகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்கள்.

அனைத்து மதத்தினரும் கை கோர்த்த அற்புதம்
மதம், இனம், சாதிகளை மறந்து ஒட்டுமொத்த திருப்பூர் மக்களும் சந்தித்த திருவிழாவாகவும் இருந்தது. மக்களும்,தொண்டு அமைப்புகளும் மிக ஆர்வமாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட தொண்டு அமைப்புகளும்,பொதுகலந்து கொண்டார்கள்.

டீ, பிஸ்கட் விநியோகம்
கலந்து கொண்டு குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்கள். மேலும் பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேனீர்,மோர், பிஸ்கட், காலை உணவு, சர்பத் என பல பொருட்களை இலவசமாக கொடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications