'மகாபாரத்தில் மங்காத்தா'.. இந்து மகாசபை மீது போலீஸ் கமிஷனரிடம் எஸ்.வி.சேகர் புகார்!
சென்னை: மகாபாரத்தில் மங்காத்தா என்ற தன்னுடைய நாடகம் தொடர்பாக அவதூறான போஸ்டர்களை இந்து மகாசபை ஒட்டியுள்ளதாக கூறி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர்.
பிரபல நடிகரும், நாடக நடிகருமான எஸ்.வி.சேகர் பல பிரபலமான நாடகங்களைப் போட்டுள்ளார்.
ஆரம்ப காலம் முதலே நாடகத்தில் பிரபலமானவர் சேகர். திரைப்படங்களில் நடித்தபோதும், தற்போதும் கூட அவர் தொடர்ந்து நாடகங்களைப் போட்டு வருகிறார்.

அவரது நாடகங்களில் ஒன்றுதான் மகாபாரதத்தில் மங்காத்தா. இந்த நிலையில் இந்த நாடகத்தைக் கண்டித்தும், எஸ்.வி.சேகரைக் கண்டித்தும் இந்து மகாசபை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னைநகர போலீஸ் கமிஷனரிடம் எஸ்.வி.சேகர் புகார் கொடுத்துள்ளார். அதில், நான் மகாபாரதத்தில் மங்காத்தா எனும் நாடகத்தை நடத்தி வருகிறேன். இதற்கு எதிராக விலாசம் இல்லாத "இந்து மகா சபை" என்ற அமைப்பு சென்னை மாநகரம் முழுவதும் எனது புகைப்படத்தை போட்டு மிகவும் ஆபாசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளது.
இது எனது மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications