For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் செப். 10ம் தேதி தீர்ப்பு!

Google Oneindia Tamil News

Delhi gang-rape case: Court to give verdict on Sep 10
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணை முடிவடைந்து விட்டது. செப்டம்பர் 10ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று டெல்லி விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி தனது நண்பருடன் இரவில் பேருந்தில் பயணித்த இளம் மருத்துவ மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. இதில் படுகாயமடைந்த அந்த மாணவி பின்னர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கைதான ஐந்து பேரில் ஒருவன் மைனர் என்பதால் அவனுக்கு சில நாட்களுக்கு முன்பு இளம் குற்றவாளிகளுக்கான கோர்ட்டில், 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற ஐந்து பேர் மீதான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஐந்து குற்றவாளிகளான ராம் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா, முகேஷ் ஆகியோரில் ராம் சிங், திஹார் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.

இன்று விசாரணை முடிவடைந்ததாக அறிவித்த விரைவு கோர்ட், செப்டம்பர் 10ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

English summary
The fast-track court on Tuesday concluded the trail of four adult accused in the December 16 gang-rape of a paramedical student on a moving bus in New Delhi and reserved its verdict for September 10. The six accused in the gang-rape case- Ram Singh, Vinay Sharma, Akshay Thakur, Pawan Gupta, Mukesh and a juvenile, gang-raped the girl in a moving bus in which she was travelling with her male friend December 16, who was also brutally attacked with the iron rod.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X