12 பவுன் செயினை பறித்துவிட்டதாக புகார்: தேமுதிக எம்.எல்.ஏ. மீது திருட்டு வழக்கு

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் அனகை முருகேசன். அவருக்கும் தேமுதிக குரோம்பேட்டை நகரச் செயலாளர் கே.எம்.ஜெ. அசோக்கிற்கும் இடையே கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் ஆகாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும்போது முருகேசனுக்கும், அசோக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததில் அசோக் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அசோக் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்று கூறப்படுகிறது.
காயமடைந்த அசோக் அன்று இரவே குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு அவர் மறுநாள் காலை அதாவது திங்கட்கிழமை குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று அனகை முருகேசன் மற்றும் 2 பேர் சேர்ந்து தன்னை தாக்கி, தான் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்துவிட்டதாக புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் எம்.எல்.ஏ. அனகை முருகேசன், அவரது கார் டிரைவர், தலைமை கழக பேச்சாளர் வளர்பிறை சோழன் ஆகிய 3 பேர் மீதும் திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications