கட்டிய தாலியை அறுத்துவிட்டு கணவருக்கு 2வது திருமணம்…: கலெக்டரிடம் புகார் கொடுத்த காதல் மனைவி
புதுக்கோட்டை: காதல் திருமணம் செய்து கொண்ட தனது தாலியை அறுத்து எறிந்துவிட்டு தன்னுடைய கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வதாக இளம் பெண் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை கிராமத்தைச் சேந்த இளம்பெண் பாண்டிச் செல்வி(22) . இவர், திங்கள் கிழமை இரவு 7 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் திருப்பூரில் வேலை செய்த போது இலுப்பூர் தாலுகா விளாப்பட்டி முருகேசன் மகன் சரத்குமார் என்பவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்தோம். அப்போது இருவரும் காதலித்து கடந்த 10.7.13 அன்று திருப்பர் மரக்கடை செல்வவிநாயகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணம் கோயில் பதிவில் உள்ளது. மேலும் திருமண படங்களும் எடுத்துக் கொண்டோம்.
இந்த நிலையில் எங்களை ஊருக்கு அழைத்து வந்த அவரது உறவினர்கள் என் தாலியை அறுத்து எரிந்து சரத்குமாரை மிரட்டி இழுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து நான் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் என் காதல் கணவர் சரத்குமாருக்கு நாளை வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆகவே அந்த திருமணத்தை நிறுத்தி என்னை என் கணவருடன் வாழவைக்க கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் இளம் பெண் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications