மதுரையில் மனவளர்ச்சி குன்றிய 2 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெண் போலீஸ் தற்கொலை
மதுரை: மதுரையில் பெண் போலீஸ் ஒருவர் தனது 2 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக இருந்தவர் ராணி. அவர் தனது கணவர் கருப்பையாவை விட்டுப் பிரிந்து வந்து பேரையூரில் உள்ள தன் தாய் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
கருப்பையா, ராணி தம்பதிக்கு ஒரு மகனும், 2 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஓவியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ராணி தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் அந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓவியாவை வளர்ப்பது குறித்து கருப்பையாவுக்கும், ராணிக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால் மனமுடைந்து அவர் இந்த முடிவை எடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications