ஏகப்பட்ட கேர்ள் பிரண்ட்ஸ்கள்.. மாப்பிள்ளையை 'கேன்சல்' செய்த சவூதி பெண்

Subscribe to Oneindia Tamil

மனாமா: தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு, டிவிட்டர், பேஸ்புக்கில் ஏகப்பட்ட தோழியர் இருந்ததால் கடுப்பாகிப் போன சவூதி அரேபியப் பெண் அந்த திருமணத்தையே ரத்து செய்து விட்டார்.

இந்தப் பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் டிவிட்டர், பேஸ்புக், பிளாக் ஆகியவற்றை கடந்த 2 வாரமாக ஆய்வு செய்தாராம். அப்போது அதில், தனது வருங்கால கணவருக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் இருப்பதையும், அவர்கள் ஏகப்பட்ட மெசேஜ்களை அவருக்கு அனுப்பி வருவதையும் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம்.

மேலும், அந்தப் பெண்கள் தனது வருங்கால கணவர் குறித்து தெரிவித்திருந்த கமென்ட்டுகள் உள்ளிட்டவையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம். பார்த்தார், இந்தத் திருமணமே வேண்டாம், மாப்பிள்ளையும் வேண்டாம் என்று முடிவு செய்து குடும்பத்தினரிடம் திருமணத்தை நிறுத்துமாறு கூறி விட்டார்.

அவரது இந்தத் துணிச்சலான முடிவு பலரது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளதாம். பல இணையதளங்களில் இந்தப் பெண்ணைப் பாராட்டி பலரும் கருத்து வெளியி்ட்டு வருகின்றனராம்.

ஆனால் கணவராக வருவதற்கு முன்பே அவரின் அந்தரங்க வாழ்க்கையில் எப்படி இப்பெண் தலையிடலாம் என்றும் பலர் இணையதளங்களில் குட்டி வருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+