ஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் கற்பழிப்பு... இன்னொரு தாத்தா சாமியார் கைது!
செஹோர், மத்தியப் பிரதேசம்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சாமியார் ஆசாராம் பாபு, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிக்கிய நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இன்னொரு சாமியார் பலாத்கார சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆசாராம் பாபுவுக்கு 72 வயதாகிறது. இப்போது புதிதாக கைதாகியுள்ள சாமியார் இவரை விட இளையவர்தான். அதாவது 65 வயதாகிறது.
இவரது பெயர் மகேந்திர கிரி என்கிற துன்னு பாபா. இவர் மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் கிராமத்தில் ஆசிரமம் வைத்துள்ளார். அந்த ஆசிரமத்திற்கு வந்த 24 வயதுப் பெண்ணை அங்கு அடைத்து வைத்து பல மாதங்களாக இவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் கிளம்பியது.
அந்த 24 வயதான மணமான பெண்ணை தனது ஆசிரமத்தில் கடந்த 4 மாதங்களாக இவர் அடைத்து வைத்திருந்தாராம். அங்கு வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம்.
இதுகுறித்து போலிஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் ஆசிரமத்திற்குச் சென்று ரெய்டு நடத்தி அந்தப் பெண்ணை மீட்டனர். சாமியாரும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications