ஒடிஷாவில் கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்துக் கொடுத்த 'பலே' நாய்
பெர்ஹாம்பூர்: ஒடிஷா மாநிலத்தில் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாய் ஒன்று உதவி செய்துள்ளது.
ஒடிஷா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள பென்கபேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மேகா மாலிக்(65). அதே கிராமத்தைச் சேர்ந்த சம்பு மாலிக், கார்த்திகா மாலிக், சனாதனா சாஹூ மற்றும் ஒருவர் சேர்ந்து மேகாவை கோடாரியால் வெட்டிக் கொன்று அவரது உடலை காட்டுப் பகுதியில் போட்டுவிட்டனர்.
காட்டுப் பகுதியில் மேகா பிணமாகக் கிடந்ததை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கண்டுபிடித்தனர். மேகா சூனியம் செய்ததால் அவர் கொல்லப்பட்டதாக நம்பப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தேடுதல் வேட்டையில் ஃபெய்த் என்ற 2 வயது மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய் குற்றவாளிகளான சம்பு மாலிக், கார்த்திகா மாலிக் மற்றும் சனாதனா சாஹூ ஆகியோரை கைது செய்ய உதவியது. நாலாவது நபரை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கோடாரியை அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளனர். அதை குளத்தில் இருந்து எடுக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
சாக்லேட் நிறத்தில் உள்ள ஆண் லேப்ரடாரான ஃபெய்த் இதற்கு முன்பும் பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications