உத்தரப் பிரதேசத்தில் 2 சமூகத்தினரிடையே மோதல்- ஒருவர் பலி.. பலர் படுகாயம்!!
Subscribe to Oneindia Tamil
சம்லி: உத்தரப்பிரதேசத்தின் சம்லி மாவட்டத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது.
சம்லி மாவட்டத்தின் திமர்சா என்ற இடத்தில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு வகுப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் ஆஷான் என்ற துப்புரவுத் தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. வீடுகள், வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சண்டையும் நிகழ்ந்துள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருவதால் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications