முன்னாடி கபிலைப் பிடிக்கும்... இப்ப டோணியத்தான் பிடிக்கும்.. கருணாநிதி கலகல!
சென்னை: பேஸ்புக் மூலம் கேள்விகள் கேட்ட பலருக்கு திமுக தலைவர் கருணாநிதி சுவாரஸ்யமான பதில்களை வழங்கியுள்ளார். அதில் ஒன்று தனக்குப் பிடித்த வீரர் யார் என்பது குறித்து அவர் அளித்துள்ள பதில்.
அரசியல் தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவர் கருணாநிதி. எழுத்தில் புலமை பெற்ற அவர் இந்தியாவிலேயே முதல் முறையாக கேள்வி பதில் பாணி அறிக்கையை வெளியிட்டவர் ஆவார்.
வழக்கமான அறிக்கைகளுடன் இந்த கேள்வி பதில் பாணி அறிக்கையையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதில் இடம் பெறும் கேள்விகள் அனைத்துமே கருணாநிதியே கேட்டுக் கொண்டு அவரே அளிக்கும் பதில்களாகும்.
தற்போது பேஸ்புக்கிலும் கலக்கி வரும் திமுக தலைவர் கருணாநிதி, அதில் பலர் கேட்கும் கேள்விகளுக்கும் தற்போது பதிலளிக்க ஆரம்பித்துள்ளார்.

கிரிக்கெட் பிரியர்
திமுக தலைவர் கருணாநிதி ஒருகிரிக்கெட் பிரியர் என்பது பிஞ்சுக் குழந்தைக்கும் கூட நன்கு தெரியும். இந்தநிலையில் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு பேஸ்புக்கில் அவர் பதிலளித்துள்ளார்.

முன்பு கபில் தேவ்... இப்ப டோணி
அதில் அவர் அளித்துள்ள பதிலில், எனக்கு பிடித்த 'கிரிக்கெட்' வீரர்கள் முன்பு 'கபில் தேவ்'. இப்போது 'தோனி' என்று பதிலளித்துள்ளார்.

நீங்கள் ஆட்சிக்கு வ்நதிருந்தால்...
அதேபோல நீங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் மின்சாரப் பற்றாக்குறையினை தீர்த்திருப்பீர்களா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஆட்சிக்கு வரவிடாமல் செய்துவிட்டு, வந்திருந்தால் தீர்த்திருப்பீர்களா என்று கேட்பது வேடிக்கையான கேள்வி என்று போட்டுத் தாக்கியுள்ளார்.

விலைவாசி உயர்வுக்கு அரசும் காரணம்
இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மக்களுக்கு அன்றாட தேவைகளான பால் (லிட்டருக்கு 2 ருபாய் ஏற்றம்) உட்பட பல பொருள்களின் விலை ஏற்றத்திற்கு இந்த அரசும் காரணமாக இருந்து வருகிறது.

முன்கூட்டியே வேட்பாளர்கள்...
அதேபோல இன்னொரு கேள்விக்கு அவர், வட மாநிலங்களைப் போல் தேர்தலின் நலன் கருதி திமுக நாடாளுமன்ற வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பது பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளார்.

திமுகவிடம் ஏன் எதிர்பார்ப்பு அதிகம்...
இன்னொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், தமிழக மக்கள் திமுக விடம் அதிகம் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம், திமுக ஆட்சியில் செய்யப்பட பல நன்மைகளும் உருவான சாதனைகளும் தான் என்று பதிலளித்துள்ளார்.

இளைஞர்களுக்கு அறிவுரை
இளைஞர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, திமு இளைஞர் அணிக்காக வெளியிடப்பட்ட நூலில் இளைஞர்களுக்கான அறிவுரைகளை வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மறக்க முடியாத நாள்... எது
உங்களால் மறக்க முடியாத நாள் எது என்ற கேள்விக்கு... பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளே என் வாழ்கையில் மறக்க முடியாத நாள் என்று பதில் கொடுத்துள்ளார் கருணாநிதி.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications