ஜெர்மன் பேக்கரி வழக்கு: தூக்கு விதிக்கப்பட்ட ஹிமாயத்துக்கு தொடர்பில்லை- பட்கல் திடுக் தகவல்
டெல்லி: புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தாமே பொறுப்பு என்றும் இதில் தூக்கு விதிக்கப்பட்ட ஹிமாயத் பெய்க்கு தொடர்பில்லை என்றும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் திடுக்கிடும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நடந்த இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர் 5 பேர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். 64 பேர் படு காயமடைந்தனர். இந்த வழக்கில் மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட ஆசிரியரான மிர்ஸா ஹிமாயத் பெய்க் கைது செய்யப்பட்டார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் நேபாள எல்லையில் சிக்கிய யாசின் பட்கலிடம் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் புனே ஜெர்மன் பேக்கரி வழக்குக்கு தாமே பொறுப்பு என்றும் இதில் தூக்கு விதிக்கப்பட்ட பெய்க்குக்கு எந்த தொடர்பும் இல்லை என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஃபயாஸ் காஸ்கிம, அபு ஜிண்டால் ஆகியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை பட்கல் கூறியுள்ளார்.

அத்துடன் தம்முடன் இணைந்து தர்பங்காவைச் சேர்ந்த முகமது கட்டீல் சித்திக் என்பவர்தான் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது என்றும் பட்கல் கூறியுள்ளார். இந்த கட்டீல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எரவாடா சிறையில் கொல்லப்பட்டார். ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பை நிகழ்ச்சிய அதே நாளில் புனேயில் உள்ள டக்துசேத் ஹல்வாய் கணபதி கோயிலையும் தகர்க்க தாங்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை என்றும் பட்கல் விவரித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜெர்மன் பேக்கரி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. ஜெர்மன் பேக்கரி வழக்கில் தமக்கு தூக்கு விதிக்கப்பட்ட போது கருத்து தெரிவித்திருந்த பெய், குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட 18வது அப்பாவி நான். என்னை மகாராஷ்டிரா போலீசார் பலிகடாவாக்கிவிட்டனர் என்று குமுறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications