எம்.ஜி.ஆர். கோவில்: குழந்தை பாக்கியம் பெற இருமுடி கட்டி வழிபடும் பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தை பாக்கியம் வேண்டி அரசமரத்தை சுற்றும் பெண்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பிள்ளை வரம் கேட்டு 41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு தம்பதி சமேதராக வந்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார். எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அதன் பிறகே கோவில் கட்டியுள்ளார்.

எம்.ஜி.ஆர். இறந்து 26 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கடந்த 2011-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டியிருக்கிறார் கலைவாணன்.

நிலத்தை விற்று…

நிலத்தை விற்று…

கோவில் உள்பகுதியில் எம்.ஜி.ஆரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. புதுப் பேட்டையில் உள்ள தனது நிலத்தை விற்று நத்த மேட்டில் கோவில் கட்டுவதற்காக இடம் வாங்கி இருக்கிறார் கலைவாணன்.

எம்.ஜி.ஆர் பாடல்கள்

எம்.ஜி.ஆர் பாடல்கள்

கோவிலில் எப்போதும் எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கோவில் திறந்து இருக்கும்.

சிலை ஊர்வலம்

சிலை ஊர்வலம்

இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது தீவிர பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு 15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்.ஜி.ஆரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

இருமுடி கட்டி வழிபாடு

இருமுடி கட்டி வழிபாடு

எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி டிசம்பர் மாதம் முதல் 41 நாட்கள் விரதம் கடைபிடித்து எம்.ஜி.ஆர்.கோவிலுக்கு தலையில் பூஜை கட்டு சுமந்து வரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் எம்.ஜி.ஆர். சிலையை தரிசித்த பிறகே கட்டை பிரிக்க வேண்டும் என்கிறார் கலைவாணனின் மனைவி சாந்தி.

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்

ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் தனது வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்ததாகவும் இப்போது எனது ஒரே கடவுள் எம்.ஜி.ஆர்.தான் என்று நெகிழ்கிறார் கலைவாணன்.

படையெடுக்கும் பக்தர்கள்

படையெடுக்கும் பக்தர்கள்

குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் சிலர் வருவதாகவும், சிலருக்கு அற்புதங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

எம்.ஜி.ஆரின் பக்தர்கள்

எம்.ஜி.ஆரின் பக்தர்கள்

‘வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நடிகராக இருந்து தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர். இன்றைக்கு கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே எத்தனையோ கர்ப்பிணிப் பெண்கள் எம்.ஜி.ஆரை காண தவம் இருப்பார்களாம். காரணம், எம்.ஜி.ஆரைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். இன்றைக்கு குழந்தை வரம் வேண்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு இருமுடி கட்டி படையெடுக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+