கச்சத்தீவு விவகாரம்.. மத்திய அரசின் நிலை குறித்து தமிழக அரசு மவுனம் ஏன்?: கருணாநிதி

இது தொடரபாக அவர் வெளியிட்டிருக்கும் கேள்வி- பதில் பாணி அறிக்கை:
கேள்வி: முதலமைச்சர் ஜெயலலிதா 1-9-2013 அன்று வெளியிட்ட அறிக்கையில், கச்சத் தீவுப் பிரச்சினையில் நீங்கள் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?
பதில் : கச்சத் தீவு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் உள்ளது என்று தெரிவித்ததும், அதிர்ச்சி அடைந்து கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டி நான் அறிக்கை விடுத்திருந்தேன். காங்கிரஸ் கட்சியின் சார்பிலேயே மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன் இதைப் பற்றி பிரதமரிடம் நேரில் பேசுவதாகவே பேட்டியளித்திருக்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில கட்சிகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தவறானது என்பதை எடுத்துக்காட்டி அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். மாநிலங்களவையிலே கூட, தி.மு.க., அ.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்கள். ஆனால் இதற்காக முதலில் பதைபதைத்து அறிக்கை விட வேண்டிய தமிழக அரசும், அதன் முதல் அமைச்சரும் இந்த நேரம் வரை வாய் திறக்கவில்லை என்பதில் இருந்தே கச்சத் தீவுப் பிரச்சனையில் உண்மையில் துரோகம் இழைப்பவர்கள் யார் என்று தெரியவில்லையா? என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications