மிஸ் டிவா 2013 அழகிப் போட்டி: பட்டம் வென்ற பி.இ. மாணவி மானசி
மும்பை: மும்பையில் நடந்த மிஸ் டிவா 2013 அழகிப் போட்டியில் பி.இ. மாணவி மானசி மோகே வெற்றி பெற்றுள்ளார்.
மும்பையில் உள்ள மேற்கு மும்பை கார்டன் சிட்டியில் மிஸ் டிவா 2013 அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நேற்று மாலை நடந்தது. இந்த இறுதிச் சுற்றில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 14 அழகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் பட்டத்தை தட்டிச் சென்றது யார் என்று பார்ப்போம்.

மானசி மோகே
இந்தூரைச் சேர்ந்த மானசி மோகே மிஸ் டிவா 2013 பட்டத்தை தட்டிச் சென்றார். அடுத்தடுத்த இடங்களை குர்லீன் க்ரேவால் மற்றும் ஷ்ரிஷ்டி ரானா ஆகியோர் பிடித்தனர். மானசி நாக்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச அழகிப் போட்டி
மிஸ் டிவா பட்டத்தை வென்றதால் மானசிக்கு இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பட்டங்கள்
சிறந்த உடலமைப்புக்கான பட்டத்தை ப்ரீத்தி சவுகானும், மிஸ் ரன்வே பட்டத்தை நிஷிதா ராவும், மிஸ் போட்டோஜனிக் பட்டத்தை ஜதலேகா மல்ஹோத்ராவும், கண்ணழகி பட்டத்தை யஷ்னா குரானாவும், மிஸ் டிஜிட்டல் பட்டத்தை சுஷ்ரி ஸ்ரேயா மிஸ்ராவும், மிஸ் சுடோக்கு பட்டத்தை சீப் தனேஜாவும், மிஸ் பாப்புலர் பட்டத்தை சோனிகா சவுகானும் வென்றனர்.

ஜீனத் அமன்
பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமன் நடுவர்களில் ஒருவராக இருந்து அழகிகளை தேர்வு செய்தார்.

ரவீனா டான்டன்
பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார்.

மலாய்க்கா
பாலிவுட் நடிகை மலாய்க்கா ஆரோராவும் நடுவராக இருந்து அழகிகளை தேர்வு செய்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications