ஓணம் பண்டிகை: செப்.14 சபரிமலை கோயிலில் நடை திறப்பு
சபரிமலை: ஓணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 14ம் தேதி திறக்கப்படுகிறது. அன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஸ்வரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி, நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
மறுநாள் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் தொடங்கும். 16ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு ஓணம் சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு ஓணம் விருந்து அளிக்கப்படும்.
ஓணம் சிறப்பு பூஜைகளுக்கு இடையே புரட்டாசி மாத பூஜைகளும் வருவதால் வரும் 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் நடை திறந்திருக் கும். 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகிய வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் நெய் அபிஷேகமும் நடைபெறும்.
வரும் 21ம் தேதியுடன் ஓணம், புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் நிறைவடையும். அன்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை சாத்தப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications