டி.டி. மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்க வேண்டும்: வைகோ கோரிக்கை
சென்னை: சர்ச்சைக்குரிய டி.டி மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டிடி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூரில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 103 பேர் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிலரை போலீசார் தாக்கினர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அனைவரையும் கிண்டியில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்கவைத்துள்ளனர்.
இதனிடையே மாணவர்களை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
அறவழியில் போராடிய மாணவர்களை கைது செய்து சிறை வைத்துள்ளனர். இவர்களை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு பல்கலைக்கழக பதிவாளர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கைது செய்துள்ளதாக மாநகர ஆணையாளர் ஜார்ஜ் கூறியுள்ளார்.
103 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. கருணை அடிப்படையில் அவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் அளிக்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைகழகம் போல டிடி மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை விடுத்தார்.
டிடி மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்காததால், 103 மாணவர்களும் இரண்டாமாண்டு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலமே கேள்விக்குறியான மாணவ, மாணவிகள், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications