For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மம்மி, நா வந்துட்டேன்....: கதவைத் திறந்து பார்த்த அம்மா அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Two-year-old girl WALKED out of private nursery and all the way home after 'workman left door open'
லண்டன்: இங்கிலாந்தில் 2 வயது குட்டிப் பாப்பா ஒன்று தனது நர்சரிப் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே அங்கிருந்து நைஸாக வெளியேறி வீட்டுக்குத் தனியாகவே போய் வி்ட்டது. பாவம் பிஞ்சுக் கால்கள் வலிக்க வலிக்க ரொம்ப தூரம் தைரியமாக நடந்தே போய் விட்டதாம் இந்த குட்டிப் பாப்பா.

பள்ளிக்கூட வாட்ச்மேன் வாசலில் காவல் காக்காமல், எங்கேயோ போய் விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு பாலம், ரவுண்டானா என ரொம்ப தூரம் இந்த குட்டி வாண்டு நடந்து போயிருக்கிறது. சிறுமி வீடு போய்ச் சேரும் வரை பள்ளிக்கூடத்தில் யாருக்குமே அவள் காணாமல் போனது தெரியவில்லையாம்.

நர்சரியில் சேர்க்கப் பட்ட பாப்பா....

அந்தக் குட்டியின் பெயர் லூயிஸ் ஹில்டன். இவள் செஷைர் நகரில் உள்ள ரன்கான் என்ற பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இக்குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அரை மைல் தூரம் உள்ளது.

அதிர்ச்சி அடைந்த அம்மா....

லூயிஸின் 26 வயது தாயார் சமந்தா கானர். தனது மகளை முதல் நாள் பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அவரது மகள் திரும்பி வந்து வீட்டில் நின்றபோது அவர் அதிர்ச்சியாகி விட்டார்.

அப்படியே, ஷாக் ஆயிட்டேன்....

என்ன ஏது என்று விசாரித்தபோது தானாகவே பள்ளியிலிருந்து மகள் வந்த விவரம் தெரிந்து இன்னும் ஷாக் ஆகி விட்டார்.

பொடி நடையா போனவரே....

பள்ளியில் விடப்பட்ட லூயிஸ், அங்கிருந்து மெதுவாக வெளியே வந்துள்ளாள். பள்ளிக்கூட கேட்டுக்கு வந்த அவள் அங்கு கேட் திறந்து கிடந்ததைப் பார்த்து அப்படியே நடக்க ஆரம்பித்தாள். பின்னர் பொடி நடையாக வேடிக்கை பார்த்தபடி வீடு நோக்கி பயணித்துள்ளாள்.

சைட் சீன்....

வழியில் ஒரு கால்வாய், பாலம் எல்லாம் வந்துள்ளது. அதையெல்லாம் நிதானமாக வேடிக்கை பார்த்தபடி போயுள்ளாள் சிறுமி. பத்திரமாக வீடு வரை வந்து விட்ட அவளைப் பார்த்து அவளது அம்மாதான் பயந்து போய் விட்டார்.

த்ரில்லிங் பயணம்....

போக்குவரத்து நிறைந்த சாலைகள், ரவுண்டானா, சுரங்கப் பாதை, ஒரு குறுகிய வனப்பகுதி என திரில்லிங்கான அனுபவத்தை சந்தித்துள்ளாள் லூயிஸ்.

எல்லாரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க....

இதுகுறித்து சமந்தா கூறுகையில், எனது மகள் காணாமல் போனது, பள்ளியை விட்டு வெளியேறியது எதுவுமே பள்ளிக்கூடத்தி்ல் யாருக்கும் தெரியவில்லை. அவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். அத்தனை பேரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும என்றுகோபமாக கூறினார்.

அசம்பாவிதம் நடக்கவில்லை...

லூயிஸின் தந்தை ஜான் ஹில்டன் கூறுகையில், எனது மகள் தவறானவர்கள் கையில் சிக்கியிருந்தால் என்னாகியிருக்கும்.. நினைக்கவே பயமாக இருக்கிறது. வழியில் இருந்த கால்வாயில் இறங்கியிருந்தால்.. நினைக்கவே படபடப்பாக இருக்கிறது. மிகவும் அதிர்ச்சி தருகிறது பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு.

மம்மி நா வந்துட்டேன்....

சமந்தா மேலும் கூறுகையில், பிற்பகல் 2 மணிவாக்கில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கூடவே மம்மி மம்மி நான் வந்துட்டேன் என்றும் எனது மகளின் குரல். பெரும் குழப்பத்துடன் போய்க் கதவைத் திறந்தாள் எனது மகள் நின்று கொண்டிருக்கிறாள். அப்படியே எனக்கு தூக்கி வாரிப்போட்டு விட்டது என்றார் கலங்கிய குரலில்.

English summary
On her first day at nursery school, Louise Hilton walked the half mile there and back hand-in-hand with her mother. The two-year-old did the same on her second morning and so, when she later spotted an open door, had no hesitation in striking out for home by herself. Braving busy roads, a roundabout, two subways and woods while narrowly avoiding a canal, the toddler made her way back from the privately run nursery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X