10,000 சிறுவர்களுக்கு மாவோயிஸ்டுகள் தீவிரவாத பயிற்சி!: உள்துறை அமைச்சகம் தகவல்

மாவோயிஸ்ட் அமைப்புள்ள சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு குழந்தைகள் இந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக சிறுவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மாவோயிஸ்டுகளுக்கு சமையல் பணிக்காக சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
எனினும் 10 முதல் 15 வயது வரை உள்ள 4 ஆயிரம் சிறுவர், சிறுமிகளுக்கு துப்பாக்கி சுடவும், ஆயுதங்களை கையாளவும் மாவோயிஸ்ட்டுகள் சிறப்பு பயிற்சி அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை கண்காணிக்கவும், சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. தகவல்
சத்தீஸ்கர் மாநிலத்தின் சில மாவட்டங்களில், மாவோயிஸ்டுகள் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு ஐநா அறிக்கை தகவல் வெளியிட்டது. இதுபோன்று எவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது
அதே நேரத்தில் கடந்த ஆண்டு, குழந்தைகள் உரிமைக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சிறுவர்ளை மாவோயிஸ்டுகளும் சல்வா ஜுடும் அமைப்பும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இந்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி, மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர், சிறுமியர்களின் உரிமையைப் பாதுகாக்கும் திட்டம் ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், பீகார், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications