ரயிலில் நகைகளை பறித்த கொள்ளையன்: நிலை தடுமாறி விழுந்த பெண் மூளை சாவு
மும்பை: மும்பையில் ஓடும் ரயிலில் கொள்ளையன் ஒருவன் நகைகளை பறிக்க முயன்றபோது நிலை தடுமாறி விழுந்த பெண் மூளைச்சாவு அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்தி கோலப்கர் என்ற 43 வயது பெண் பன்வானே என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணி புரிகிறார். கடந்த வியாழனன்று. வேலை முடிந்து இரவு 8.30 மணியளவில் மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்தார். அப்போது கொள்ளையன் ஒருவன் அந்தப் பெட்டியில் ஏறி அவரிடம் நகையையும் கைப்பையையும் பறிக்க முயன்றான்.
இதனால் நிலை குலைந்த ஆர்த்தி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு மயக்கம் அடைந்தார்.
உடனே கொள்ளையனும் ரயிலில் இருந்து கீழே குதித்தான். மயங்கி கிடத்த ஆர்த்தியிடம் இருந்து நகையையும் கைப் பையையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டான்.
ரயில் அடுத்த ரயில் நிலையத்தில்தான் நின்றது. ஆர்த்தியுடன் சென்றவர்கள் இதுபற்றி ரயில் என்ஜின் டிரைவரிடம் தெரிவித்தனர். அதன்பிறகு ஆர்த்தி விழுந்த இடத்துக்கு ஓடிச் சென்று அங்கு மயங்கி கிடந்த ஆர்த்தியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆர்த்தி பயணம் செய்தது பெண்கள் பெட்டி. அதில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கொள்ளையன் அத்துமீறி இதில் ஏறி நகையை பறித்ததுடன் கீழே தள்ளி உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டதாக மற்ற பயணிகள் கவலை தெரிவித்தனர்.
கீழே விழுந்து அடிபட்டதில் ஆர்த்திக்கு அதிக அளவு ரத்தம் வெளியேறி விட்டது. தலையில் பலத்த அடிபட்டதால் மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications