ஓணம் பண்டிகை: தோவாளை சந்தையில் பூக்கள் விற்பனை படுஜோர்
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று தொடங்குகிறது. அத்தப்பூ கோலமிடுதலுக்காக கேரள வியாபாரிகள் குவிவதால் குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட் களை கட்ட துவங்கியுள்ளது. பூக்களில் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை பத்துநாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை அத்தம் பத்தினு பொன்னோணம் என்று கேரள மகிழ்ச்சியாக கூறுவார்கள்.
கேரள மற்றும் குமரி மாவட்ட மக்கள் வசந்த கால விழாவாக ஒணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். செப்டம்பர் 16-ஆம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.

அத்தப்பூ கோலம்
இந்த பத்து நாட்களும் விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு வீட்டினை அலங்கரக்கின்றனர். திருவோண நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவு பாதர்த்தங்களுடன் உற்சகமான ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து, படகு போட்டி, போன்ற பல்வேறு விளையாட்டுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

மகாபலி மன்னன்
மலையாள நாட்டை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி மக்களை ஓணத் திருநாளில் காண வருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தங்களை காணவரும் மன்னனை வரவேற்க அத்தப்பூ கோலமிடுகின்றனர் மலையாள மக்கள்

விதவிமான பூக்கோளம்
அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என 10 நாட்களும் 10 களம் அனுஷ்டிக்கப்படுகிறது. முதல் களத்தில் விநாயகர், 2-வது களத்தில் சக்தி, 3-வதில் சிவன், 4-வதில் பிரம்மா, 5-வதில் பஞ்ச பூதங்கள், 6-வதில் முருகன், 7-வதில் குரு, எட்டாவதில் அஷ்டதிக் பாலகர், ஒன்பதாவதில் இந்திரன், பத்தாவதில் விஷ்ணு. இவ்வாறு 10 களங்களிலும் இறை வடிவங்கள் பிரதிஷ்டிக்கப்பட்டு இம்மக்கள் வழிபடுகின்றனர்.

தோவாளை பூ சந்தையில்
ஓணப் பண்டிகையினை முன்னிட்டு அத்தப்பூ கோலமிடுதலுக்காக கேரள வியாபாரிகள் குவிவதால் குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட் களை கட்ட துவங்கியுள்ளது. மல்லிகை, சிவந்தி, கிரேந்தி, பிச்சி, கனகாம்பரம், வாடாமல்லி, அரளி, ரோஜா, சம்பங்கி, கோழிபூ, தாமரை, தாழம்பூ உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் இங்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன. இப்பூக்களே கேரளாவின் மலர் திருவிழாவிற்கு மணம் சேர்க்கின்றன.

விலை அதிகம்
ஓணம் பண்டிகையோடு திங்களன்று விநாயகர் சதுர்த்தி விழாவும் கொண்டாடப்படுவதால் பிச்சி, மல்லி, அரளி, செவ்வந்தி, வாடாமல்லி, சம்பங்கி, ரோஜா, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களில் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications