கோயில்களில் எவ்வளவு தங்கம்?: கேள்வி கேட்ட ரிசர்வ் வங்கிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு!
திருவனந்தபுரம்: கேரளா கோயில்களில் வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்து ரிசர்வ் வங்கி விபரம் கேட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள.
ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களில் குவிந்து கிடக்கும் தங்கம் பற்றிய கணக்குகளை ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் உள்ள கோயில்களில் வைக்கப்பட்டுள்ள தங்கம் குறித்த விவரங்களை பெற ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து அனைத்து தேவசம்போர்டுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவில் முக்கியமாக திருவங்கூர் தேவசம்போர்டு, குருவாயூர், மலபார் தேவசம்போர்டு உள்ளிட்ட 5 அமைப்புகள் உள்ளன. இந்த 5 தேவசம்போர்டு கீழ்தான் முக்கிய கோயில்கள் உள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுபாட்டிலும், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் குருவாயூர் தேவசம்போர்டு கட்டுபாட்டிலும் உள்ளன.
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகளில் கணக்கிட முடியாத பொக்கிஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில் 5 அறைகளில் உள்ள நகைகள் கணக்கெடுக்கும் பணி முடிந்து விட்டது. இதில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. மிக முக்கியமான பி அறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த அறையில் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷம் இருக்கும் என கருதப்படுகிறது.
எனவே இந்த கோயில்களில் உள்ள பொக்கிஷங்கள் குறித்து விபரங்களை பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஎச்பி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல்












Click it and Unblock the Notifications