ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் பணியாற்ற நான் ரெடி.. 'டெல்லி ஓ.பி.எஸ்' மன்மோகன் அறிவிப்பு!
டெல்லி: பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி நல்ல சாய்ஸ்தான். அவரது தலைமையின் கீழ் பணியாற்ற நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
கிட்டத்தட்ட டெல்லியின் ஓ.பன்னீர்செல்வமாக மாறி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இடைக்காலமாக முதல்வர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்ததும், அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார்.
கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் செயல்பட தானும் தயாராகவே இருப்பதாக பிரமதர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டி....

எதைக் கொடுத்தாலும் செய்வேன்..
2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இருக்க நான் தயார்.

ராகுல் தலைமைக்கும் ரெடிதான்...
ராகுல் காந்தி தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்றாலும் அதற்கும் நான் தயார்தான். மிகவும் மகிழ்ச்சியோடு நான் செயல்படுவேன்.

பிரதமர் பதவிக்கு செம பொருத்தம்
ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு நல்ல பொருத்தமானவர், தகுதியானவர்.

நான்தான் சொல்லிட்டே இருக்கேனே...
பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அவரது தலைமையில் செயல்பட நானும் தயாராகவேஇருக்கிறேன்.

திரினமூலுடன் சேரலாமே...
வரும் தேர்தலில் திரினமூல் காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அரசியலில் எப்போதுமே நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பர்களும் கிடையாது.

மரியாதைக்குரிய மமதா
மமதா பானர்ஜி மரியாதைக்குரிய தலைவர். காங்கிரஸ் கட்சியில் மூத்த உறுப்பினராக ஒரு காலத்தில் இருந்தவர் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications