அம்மா உணவகத்தில் ரூ.3க்கு 2 சப்பாத்தி! - 'கோபாலபுரத்தில்' டெஸ்ட்டிங்!!

Subscribe to Oneindia Tamil

Amma Unavagam to serve Dinner till 9 PM on Sep 15.
சென்னை: அம்மா உணவகத்தில் வரும் 15ஆம் தேதி முதல் 3 ருபாய்க்கு 2 சப்பத்திகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாநகரில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை 1 இட்லி 1 ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இட்லி தவிர பெங்கல்-சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

2 சப்பாத்தி

அம்மா உணவகங்களில் இனி மாலை நேரங்களில் சப்பாத்தியும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மே மாதம் 15-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.மலிவு விலை உணவகங்களிலும் மாலை நேரத்தில் 2 சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதற்காக சப்பாத்தி தயாரிக்கும் மிசின்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வரும் 15-ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்.

தினசரி 400000 சப்பாத்திகள்

சப்பாத்திக்கு மாவு பிசையும் மிஷின் ஒரு மண்டலத்துக்கு 1 வீதம் 15 மண்டலத்துக்கு ரூ. 4 கோடி செலவில் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 கடைக்கு 2 ஆயிரம் சப்பாத்தி வீதம் 30 ஆயிரம் சப்பாத்தி 1 மண்டலத்திற்கு தயார் செய்யப்பட்டு 15 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதே போல் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் இருந்து 4 லட்சம் சப்பாத்தி தினமும் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படும்.

சோதனை ஓட்டம்

இதன் சோதனை ஓட்டம் நேற்று கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் செய்து பார்க்கப்பட்டது. அப்போது சப்பாத்தி மிகவும் அருமையாக வந்தது. பருப்பு கடைசலும், குருமாவும் நன்றாக இருந்தது.

செப்டம்பர் 15 முதல்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 15-ந்தேதி சப்பாத்தி வினியோகத்தை தொடங்கி வைத்ததும், 200 வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் தினமும் மாலை நேரங்களில் 3 ரூபாய்க்கு 2 சப்பாத்தி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+