தேவர் ஜெயந்தி-இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
ராமநாதபுரம்: இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு கலெக்டர் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
இன்று (9-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரையும், அக்டோபர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்பகுதிகளில் இருந்தும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை போன்றவற்றுக்கு வாடகை வாகனங்களில் வரவும் தடைவிதிக்கப்படுகிறது.
இதேபோல் நினைவு ஜோதி எடுத்து வரவும் அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நினைவிடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஜோதி எடுத்து வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications