தேமுதிகவுக்கு 9 வயது... சிறப்பாக கொண்டாட விஜயகாந்த் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக 9வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேமுதிக தொடங்கப்பட்டது, அதன் வளர்ச்சிப் பாதை, இன்று உள்ள நிலைமை ஆகியவற்றை தனது அறிக்கையில் அவர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

8 ஆண்டுகளை முடித்து...

8 ஆண்டுகளை முடித்து...

வரும் செப்டம்பர் 14ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் 8ஆண்டுகளை முடித்து தனது 9வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.

ஆரம்பிப்பது சுலபம்...

ஆரம்பிப்பது சுலபம்...

ஒருகட்சியை ஆரம்பிப்பது சுலபம் ஆனால் தொடர்ந்து நடத்துவது மிகவும் கடினம். தேசிய முற்போக்கு திராவிட கழகம் இந்த அளவுக்கு வளர்ந்து வருகிறது என்றால் மக்கள் ஆதரவும்,தொண்டர்கள் உழைப்பும்தான் காரணம்.

சோதனைகள் பலப்பல...

சோதனைகள் பலப்பல...

எனினும் கடந்த ஆண்டுகளில் நாம் சந்தித்த சோதனைகள் பலப்பல அதுவும் குறிப்பாக சென்ற ஆண்டு கழக நிர்வாகிகளும்,கழக தோழர்களும்,ஆளும் கட்சியினரின் பொய் வழக்குகளால் அவதிபட்டதற்க்கு எல்லையே கிடையாது.

வழக்குகளுக்குப் பஞ்சமில்லை

வழக்குகளுக்குப் பஞ்சமில்லை

என்மீதும், என் குடும்பத்தின் மீதும் போடப்படும் அவதூறு வழக்குகளுக்கு பஞ்சமில்லை. இவை எல்லாவற்றையும் சமாளித்து இந்த இயக்கத்தை கட்டி காப்பாற்றி வருகிறோம்.

மரியாதையே கிடைக்க்க கூடாது

மரியாதையே கிடைக்க்க கூடாது

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டியது மட்டுமல்ல எதிக்கட்சிகளே இருக்க கூடாது என்கின்ற சர்வாதிகார எண்ணம் தமிழ் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. ஆகவே ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு.

குரல் கொடுக்கத் தவறவில்லை

குரல் கொடுக்கத் தவறவில்லை

இந்த சூழ்நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்காக நாம் குரல் கொடுக்க தவறவில்லை. உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்ம்,சட்டம் ஒழுங்கு சீர்கேடு, என்றும் தீராத மின் பற்றக்குறை என பல்வேறு கஷ்டங்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

லஞ்சம் கொடி கட்டிப் பறக்கிறது

லஞ்சம் கொடி கட்டிப் பறக்கிறது

லஞ்சம் கொடிகட்டி பறக்கிறது. குடிதண்ணீர் பற்றாக்குறை முதல் டாஸ்மாக் கடைகள் அகற்றுவது வரை ஆங்கங்கே நம்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

மக்கள் குமுறுகின்றனர்

மக்கள் குமுறுகின்றனர்

மக்கள் குமுறுகின்றனர். கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வறுமையை ஒழிக்கும் வண்ணம் நம்முடைய சொந்த நிதியில் இயன்றதை செய்வேம் இல்லாதவருக்கே என்ற அடிப்படையில் கழகத்தோழர்கள் வரும் 14ம் தேதி கொடியேற்றி இனிப்பு வழங்கி,நலத்திட்ட உதவிகள் செய்யும் மாறும்,கழகத்தின் துவக்கநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சூளுரை ஏற்போம்

சூளுரை ஏற்போம்

ஏழைகளே இல்லாத நாடு என்ற நிலையை நம்நாடு எட்டிட அயராது பாடுபடுவேம் என்று இந்த நேரத்தில் சூளுரை செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+