ஈழத் தமிழர்கள் மிகவும் துயரப்படவில்லை..நன்றாகவே வாழ்கின்றனர்: சுதர்சன நாச்சியப்பன்

Subscribe to Oneindia Tamil

Eelam tamils have no problems in Sri Lanka: Sudarshan Nachiappan
புதுக்கோட்டை: இலங்கையில் தமிழர்கள் மிகவும் துயரப்படவில்லை.. நன்றாகவே வாழ்கின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே மிரட்டுநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சன நாச்சியப்பன், கச்சத்தீவில் இந்தியா - இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அனுபவத்தில் உள்ள இலங்கையின் ஆழ்கடல் பகுதியை நாம் இழக்க நேரிடும்.

இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர விரும்புகிறார்.

இலங்கையில் தமிழர்கள் துயரப்படவில்லை. நன்றாகவே வாழ்கிறார்கள். அதே போல தமிழக மீனவர்கள் மீது கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தவில்லை.

கடந்த 4 ஆண்டுகளில் அப்படி நடந்திருந்தால் எப்.ஐ.ஆர் காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை சீனா உறவால் இந்தியா பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தான் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+