ஈரோட்டில் 75 வயது அக்காவை கருணைக் கொலை செய்த 70 வயது தம்பி
ஈரோடு: ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.
ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75). அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார்.
பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.
இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத்தில் புதைத்துவிட்டு தாலுகா போலீசில் மூர்த்தி சரணடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் பர்வதம் வீட்டுக்கு முன்பு நேற்று காலை குவிந்தனர். இந்நிலையில் நேற்று மாலை பர்வதத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications