அபுதாபி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு கௌரவிப்பு... ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi Photo in Dubai Tower: மோடி பிரதமராக பதவியேற்றதை ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது- வீடியோ

    அபுதாபி: நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றதை ஐக்கிய அரபு அமீரகம் கவுரவித்துள்ளது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட விழாவில், நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி, பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    ஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?ஓஹோ.. இதுதான் விஷயமா.. அதான் மேனகாவுக்கு அமைச்சர் பதவி இல்லையா?

    தலைவர்கள் பங்கேற்பு

    தலைவர்கள் பங்கேற்பு

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், இணை-அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்பு இணை-அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு

    வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு

    அதே நேரம், வங்க தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான், கிர்கிஸ்தான், மொரிஷியஸ், கஜகஸ்தான் உள்பட 14 நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    மோடியின் புகைப்படம்

    மோடியின் புகைப்படம்

    இந்தநிலையில், பிரதமராக மோடி தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றதை அடுத்து அபுதாபியில் மோடியின் புகைப்படத்தை ஒளிபரப்பி கவுரவித்தனர். அபுதாபியில் உள்ள பிரபல நிறுவனமான அன்நாக் நிறுவன கட்டடத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கொடிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஷேக் முகமது பின் சையத்தும் கை குலுக்குவது போன்ற காட்சிகளும் கட்டடத்தில் காண்பிக்கப்பட்டது.

    உண்மையான நட்பு

    உண்மையான நட்பு

    இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறியதாவது: இதுதான் உண்மையான நட்பு. இரண்டாவது முறையாக மோடி பதவியேற்கும் போது, அபுதாபியில், இந்தியா, யுஏஇ தேசிய கொடி, பிரதமர் மோடி மற்றும் ஷேக் முகமது பின் புகைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது எனக்கூறியுள்ளார்.

    கோல்டு கார்டு

    முன்னதாக, அமீரகத்தின் முன்னேற்றதிற்கு உதவும் வகையில் முதலீடு செய்தவர்கள், மருத்துவம், பொறியியல், அறிவியல், கலைகள் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், ‘கோல்டு கார்டு' வழங்கப்படும் என அமீரகத்தின் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Now this is true friendship! As PM @narendramodi is sworn in for a second term in office, the iconic @AdnocGroup tower in Abu Dhabi is lit up with India and UAE flags and portraits of our PM and of HH Sheikh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X