அபிஷேகம் + வழிபாடு.. அபிதாபியின் முதல் இந்து கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம்! சிறப்பே இதுதான்
அபுதாபி: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலுக்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம், அபிசேகம் செய்த வீடியோ, போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் சென்ற கோவில் பற்றிய மலைக்க வைக்கும் சிறப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். இயக்குநர் ஞானவேல் இயக்கி வரும் 'வேட்டையன்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவர் தொடர்பான படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் தான் ரஜினிகாந்த் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். அபுதாபி சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுஃப் அலியை சந்தித்தார். மேலும் அவருடன் காரில் செல்லும் வீடியோக்கள் வெளியாகின.
இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்துக்கு அபுதாபியில், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் காலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது கலீஃபா அல் முபாரக் வழங்கினார். இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில், ‛‛அபுதாபி அரசாங்கத்திடம் இருந்து மதிப்புமிக்க யுஏஇ கோல்டன் விசாவைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும், இந்த விசாவை எளிதாக்கியதற்காக லுலு குழுமத்தின் தலைவரும், என் நல்ல நண்பருமான யூசுப் அலி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான 'BAPS Hindu Mandir'-ல் சாமி தரிசனம் செய்த வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கோவிலில் சாமி தரிசனம் மற்றும் அபிசேகம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்த கோவிலின் சிறப்புகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த கோவில் அபுதாபியின் முதல் இந்து கோவிலாகும். அபுதாபி அல் முரக்கா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.700 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக இந்த சுவாமி நாராயண் கோவில் கட்டப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் உதவியுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.கோவிலில் தியான அறைகள், கண்காட்சி மையங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகளும் உள்ளன. இந்த கோவிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்.
அயோத்தி ராமர் கோவில் போல் இந்த கோவில் கட்டும் பணிக்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. இந்த கோவிலுக்கு கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பணிகள் தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முழுவதுமாக நடந்து முடிந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் அந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications