இந்தியா குளோபல் ஃபோரம்: மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவுடன் கூட்டு திறனை வலுப்படுத்தும் இந்தியா!
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான கூட்டு திறனை மேம்படுத்தும் விதமாக இந்தியா குளோபல் ஃபோரத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் அமைந்திருக்கிறது.
இந்தியா குளோபல் ஃபோரம்: உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் அமர்ந்து விவாதிக்கும் உலகளாவிய தளமாக இந்தியா குளோபல் ஃபோரம் இருக்கிறது. இதில் வர்த்தகம், முதலீடு, வெளியுறவுக் கொள்கை, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை போன்றவை குறித்து விவாதிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான கூட்டு திறனை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாடல் நடந்திருக்கிறது. இதில் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில் புதிய பொருளாதார வாய்ப்புகள் ஆராயப்பட்டன.
இதில் 'டுபோமெடியின்' இணை நிறுவனரும், நகைச்சுவை நடிகருமான மினா லிசியோன் சிறப்புரையாற்றியிருந்தார். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு கலை பள்ளியாகும். மினா லிசியோன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளியின் இணை நிறுவனராக இருக்கிறார். இவர், நகைச்சுவை எப்படி பிரச்சினைகளில் வெளிப்படையான உரையாடல்களுக்கு சவால் விடும் என்பது குறித்து பேசியிருந்தார்.
இவரை தொடர்ந்து முகமது அபுஹம்ரா உரையாற்றினார். டிஜிட்டல் டெக்னாலஜி, டிபி வேர்ல்ட் ஜி.சி.சி.யின் தலைமை இயக்க அதிகாரியான இவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் சகாப்தத்தில் தற்செயல் திட்டமிடலைக் குறித்து பேசியிருந்தார்.
இந்த அமர்வில் மிக முக்கியமாக ராஜேஷ் நம்பியாரின் பேச்சு இருந்தது. இவர் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காமின் தலைவராக இருக்கிறார். செயற்கை தொழில்நுட்பங்கள் வர்த்தக கட்டமைப்புக்கும், தளவாட துறைக்கும் என்னென்ன நன்மைகளை செய்ய இருக்கின்றன என்பது குறித்து பேசியிருந்தார். டிஜிட்டல் வர்த்தகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருக்கிறது என்றும், இதன் ஆதரவுடன் துபாயில் வர்த்தகம் மற்றும் தளவாடத் துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல வெற்றிகரமான வணிக உத்திகளை உருவாக்குதல் குறித்து சொரின் அட்வைசர்ஸ் எல்எல்பியின் நிறுவனர் சஞ்சய் நாயர், அசிடுஸ் நிறுவனர் சோம்துத்தா சிங், accel நிறுவனர் பிரசாந்த் பிரகாஷ் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.
இது தவிர 'AI மற்றும் ஹெல்த்கேர் டெலிவரியின் எதிர்காலம்', காலநிலை மற்றும் வணிகம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மிகக்குறிப்பாக இந்திய விளையாட்டுகளை மறுபரிசீலனை செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. DreamSetGo நிறுவனர் & CEO மோனிஷ் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமை வணிக அதிகாரியான அனுராக் தஹியா, SG ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் மகேஷ் பூபதி, ஹைதராபாத் டூஃபான்ஸ், இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பாஷா காட்மேன் ஆகியோர் இந்த விவாதங்களில் பங்கெடுத்திருந்தனர்.
கிரிக்கெட் விளையாட்டின் லீக் போட்டிகளை நடத்துவது, அதற்கான ஸ்பான்சர் உள்ளிட்டவை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டிருந்தன. தவிர ஸ்பாட்லைட்டில் அழகு, ஆரோக்கியம் மற்றும் சமூக ஊடகங்கள் குறித்தும் சமூக ஊடகங்களில் படைப்பாற்றல் மற்றும் செல்வாக்கு குறித்தும் கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளன.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications