வெளுத்து வாங்கிய கனமழை.. சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை: சீர்காழி பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
சென்னை மட்டுமின்றி மயிலாடுதுறை, சீர்காழியில் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் சூழலே உள்ளது.
மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்றும் பணிகள் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் மட்டும் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் 44 சென்டிமீட்டர் அளவுக்குக் கனமழை கொட்டி தீர்த்து உள்ளது.
இதற்கிடையே சீர்காழி தாலுகாவில் இன்றைய தினம் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை கலெக்டர் லலிதா அறிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அங்குப் பெய்த கனமழை காரணமாக மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை மறு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாகவே சீர்காழி தாலுகாவில் உள்ள 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீர்காழி தாலுகாவில் இதர வகுப்புகளும், கல்லூரிகளும் கூட வழக்கம் போலவே இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications