6.5 கோடி வருட பழமையான டைனோசர் முட்டை.. அரியலூரில் அதிசயம்.. உலகை வியக்க வைக்கும் தமிழ்நாடு
அரியலூர்: பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் பல்வேறு விவசாயபணிக்காக அவ்வப்போது பூமியைத் தோண்டும் பொழுது வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்ற முட்டை வடிவிலான பாறைகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.. அந்தவகையில், தற்போதும் ஒரு ஆச்சரிய சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.
ஜூராசிக் பார்க் என்ற படம் ஹாலிவுட்டில் வந்தபோதுதான், டைனோசர் என்ற ஒரு இனமே இந்த உலகில் வாழ்ந்தது பெரும்பாலானோருக்கு தெரியவந்தது.. இதற்கு பிறகு டைனோசர் பற்றின ஆய்வுகள், ஆராய்ச்சிகள் உலகளவில் இன்றும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன..

டைனோசர் முட்டைகள்
டைனோசர் பற்றின ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும்நிலையில், ஒவ்வொரு ஆய்வுகளிலும் புது புது விஷயங்கள் தெரிய வருகின்றன..
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில் டைனோசர்களின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.. அங்கு 92 கூடுகளில் 256 புதைபடிவ முட்டைகள் இருந்திருக்கின்றன.
அதேபோல கடந்த பிப்ரவரி மாதம், 7 கோடி அதாவது 70 மில்லியன் வருட பழமையான டைனோசர் கரு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடித்த கருவில், நன்றாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் கரு இதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
டைனோசரின் எச்சங்கள்
இந்நிலையில், 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்பிரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எம்பிரேசரஸ் ராத்தி என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்டர் உயரம் கொண்டதாகவும், 2 கால்களில் ஓடியதாகவும், நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான ஒழுங்கற்ற பற்கள் கொண்டதாகவும் இருந்தன என்று ஆய்வில் தற்போது தெரிய வந்துள்ளது. இப்படி பல்வேறு பகுதிகளில் டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஆச்சரியம்
இதில் நம்முடைய அரியலூர் மாவட்டத்திலும் பலரது கவனம் குவிந்துள்ளது.. காரணம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். அப்போது பல்வேறு விவசாய பணிக்காக பூமியை தோண்ட நேரிடும்போது, வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்ற முட்டை வடிவிலான பாறைகள் கிடைத்துள்ளன.
அரியலூர் கனிம சுரங்கங்களில் சுமார் 6.5 முதல் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அதிகமாக கிடைத்து வருகிறது.
கடந்த 1980-85 ஆண்டுகளில், தமிழ்நாடு சிமெண்டு நிறுவன திறந்தவெளி சுரங்கத்தில் பாறை ஒன்று கிடைத்துள்ளது.. இதனை 1996-ல் ஜெர்மனி, இந்தியாவை சேர்ந்த சில தொல்லுயிர் ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோதுதான், அது உண்மையான டைனோசரின் முட்டை என்பது தெரியவந்தது.
ஆற்றங்கரையில் இட்ட முட்டை
சுமார் ஆறரை கோடி வருடங்களுக்கு முன்பு, ஏதோ ஒரு ஆற்றங்கரையில் டைனோசர் இட்ட முட்டையானது, காலப்போக்கில் தண்ணீரில் அடித்துக் கொண்டு கடல் அடியில் போய் சேர்ந்திருக்கலாம் என்றும் அது படிமணலில் புதைந்து காலப்போக்கில் படிவமாகி இப்போது சிதையாமல் கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவிலேயே கடலடியில் உருவான பாறைகளில் கிடைத்த ஒரே டைனோசர் முட்டை இதுதானாம்.. இந்த பழமையான டைனோசர் முட்டை இப்போது வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டள்ளது.
இதைக்கேள்விப்பட்டதுமே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்த டைனோசர் முட்டையை பார்வையிட்டு வருகிறார்கள்.. அந்த வகையில், 6.5 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை அரியலூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது வியப்பை கூட்டி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications